பாதிக்கப்பட்ட நம்முடைய அஸ்ஸாமிய முஸ்லிம் சொந்தங்களுக்காக நேரிலே சென்று அங்கேயே மாடுகளை அறுத்து நம்முடைய குர்பானிகளை நிறைவேற்றி உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, ஒதுங்க இடமின்றி தவிக்கும் அந்த அப்பாவி மக்களுக்கு நம்முடைய குர்பானி இறைச்சியை வழங்கினோம் . எங்களது இந்த முயற்சியில் நீங்களும் பங்கெடுக்கும் விதத்தில் உங்களது குர்பானி பங்கை எங்கள் அழகிய கடன் அறக்கட்டளைக்கு வழங்கியமைக்காக அறக்கட்டளையின் சார்பிலும் அஸ்ஸாம் மக்களின் சார்பிலும் மனமார்ந்த ஜசாக்கல்லாஹ்வை தெரிவித்துகொள்கிறோம்.